Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவிலிருந்து மீண்டோருக்கு எப்போது தடுப்பூசி? – மத்திய அரசு விளக்கம்!

Webdunia
புதன், 19 மே 2021 (17:31 IST)
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் ரஷ்யாவிடமிருந்து ஸ்புட்னிக் தடுப்பூசியும் பெறப்பட்டுள்ளது.

முன்னதாக 45 வயதிற்கு அதிகமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 18 வயதிற்கு அதிகமானோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதித்து அதிலிருந்து மீண்டவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்வது பற்றிய குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள மத்திய அரசு கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் மூன்று மாதம் கழித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என கூறியுள்ளது. அதுபோல முதல் டோஸ் தடுப்பூசி எடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தால் 3 மாதத்திற்கு பிறகு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments