Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருட்டு செல்போன்களை விற்கிறதா பிளிஃப்கார்ட்?

திருட்டு செல்போன்களை விற்கிறதா பிளிஃப்கார்ட்?
, செவ்வாய், 6 அக்டோபர் 2015 (08:56 IST)
டெல்லி விமான நிலையத்தில்  வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட  ரூ.40 லட்சம் மதிப்புடைய செல்போன்கள் பிளிஃப்கார்ட் இணையதளம் மூலம் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக? அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.


 
 
டெல்லி இந்திராகாந்தி விமானநிலையத்தில்  வெளிநாடுகளில் இருந்து  இறக்குமதி செய்யப்பட்ட 40 லட்சம் ரூபாய் மதிப்புடைய செல்போன்கள் அண்மையில் கொள்ளையடிக்கப்பட்டன.
 
இது குறித்து செல்போன் வர்த்தகர்கள் அளித்த புகாரினைத் தொடர்ந்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
 
கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ. எண்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது டெல்லியில் உள்ள 22 பேர் கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களை பயன்படுத்தி வந்தது தெரிவந்தது.
 
இதனைத் தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிஃப்கார்ட்டில் இருந்து இந்த செல்போன்களை வாங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். அதற்கான  ஆவணங்களையும்  அவர்கள் காவல்துறையினரிடம் அளித்தாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
 
இந்த வழக்கில் 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். கொள்ளயடிக்கப்பட்ட செல்போன்கள் பிளிஃப்கார்ட் நிறுவனம் மூலம் எப்படி விற்பனை செய்யப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு பிளிஃப்கார்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 
கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்கள் பிளிஃப்கார்ட் நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்பட்டிருப்பது ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குபவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil