Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொருளியல் மறுதேர்வு தேதி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 30 மார்ச் 2018 (18:32 IST)
தற்போது சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் 10ஆம் வகுப்பு கணித பாடம் மற்றும் 12ஆம் வகுப்பு பொருளியல் பாடம் ஆகியவற்றின் கேள்வித்தாள்கள் லீக் ஆகிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த இரண்டு பாடங்களுக்கும் மறு தேர்வு நடத்தப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்திருந்த நிலையில் தற்போது சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொருளியல் மறுதேர்வு ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறும் என அறிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிபிஎஸ்இ தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரம் குறித்து துறை ரீதியிலான விசாரணையை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த மறுதேர்வுக்கு பெரும்பாலான மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எங்கோ ஓரிடத்தில் நடந்த தவறால் அனைத்து மாணவர்களும் மறுதேர்வு எழுத வேண்டுமா? என்பதே அவர்களுடைய கோரிக்கையாக இருந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments