Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மல்லையாவிற்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடி வாரண்ட் - சிறப்பு நீதிமன்றம் அதிரடி

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2016 (17:22 IST)
தொழிலதிபர் விஜய் மல்லையாவிற்கு பிடி வாரண்ட் பிறப்பித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


 

‘கிங் பிஷர்’ மதுபான ஆலை அதிபரான விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளில ரூ. 9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான கடனை வாங்கி விட்டு, அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பியோடி விட்டார்.

அவருக்கு எதிரான கடன் மோசடி வழக்குகளை சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். விஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளி என்று பணமோசடி தடுப்பு நீதிமன்றமும் அண்மையில் அறிவித்தது.

இதனிடையே, பல்வேறு நிறுவனங்களுக்கு விஜய் மல்லையா அளித்திருந்த காசோலைகள், அவரது வங்கிக் கணக்குகளில் போதிய பணம் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டன.

இந்நிலையில், மல்லையா குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சில உறுதிப் பங்குகள், இது தொடர்பான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை பறிமுதல் செய்து முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கையை தீவிரப்படுத்த அமலாக்கத்துறை முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பு முறைகேடு, மோசடி வழக்கு தொடர்பாக ரூ.1,411 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்தது. இந்நிலையில், தற்போது ரூ. 6 ஆயிரத்து 630 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத் துறையால் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,  சிபிஐ தொடுத்துள்ள வழக்கில் பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என துடித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி: அமைச்சர் தங்கம் தென்னரசு

வீட்டுக்கு திருட்டு கரண்ட் எடுத்த சமாஜ்வாடி எம்.பி..! அபராதம் விதித்த மின்வாரியம்!

அம்பேத்கர் குறித்த அமித்ஷா உரையை நீக்க எக்ஸ் நிறுவனம் மறுப்பு.. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்..!

உக்ரைன் உடனான போரை நிறுத்திக் கொள்ள தயார்! சமரசத்துக்கு வரும் புதின்? ட்ரம்ப்தான் காரணமா?

நாளை முதல் சென்னையில் இருந்து பினாங்கு தீவுக்கு நேரடி விமானம்..நிறைவேறிய நீண்டநாள் கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments