Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.50 கோடி ஊழல் : கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் கைது

Webdunia
திங்கள், 4 ஜூலை 2016 (20:21 IST)
முறைகேடாக அனுமதி வழங்கி ரூ.50 கோடி வரை ஊழல் செய்ததாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
கடந்த டிசம்பர் மாதம், அரிவிந்த் கெஜ்ரிவால் அலுவலகம் உட்பட, தலைமை செயலக வளாகத்தில்  பல இடங்களில் சிபிஐ திடீர் சோதனை நடத்தியது. அதற்கு கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில்,  கெஜ்ரிவாலின் முதன்மை செயலாலர் ராஜேந்திரகுமாரை  ஊழல் புகாரில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவருக்கு உறுதுணையாக இருந்த துணை செயலாலர் தருண் ஷர்மா உட்பட மேலும் 4 அதிகாரிகளையும் சிபிஐ கைது செய்துள்ளது.
 
ஏற்கனவே மத்திய  அரசுக்கும் டெல்லி அரசுக்கும் அடிக்கடி மோதல் நடைபெற்று வரும் வேளையில், 50 கோடி ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் டெல்லி அரசியலில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
 
ராஜேந்திரகுமார் டெல்லி அரசின் பல்வேறு பகுதிகளில் பணிபுரிந்துள்ளார். 2007 முதல் 2014ஆம் ஆண்டு வரை அவர் வகித்த பதவிகளில், கோடிக்கணக்கான மதிப்புள்ள பணிகளை, அவர் முறைகேடாக என்டீவர் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். அவருக்கு சில அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த விவகாரத்தில் ரூ.50 கோடி வரை ஊழல் நடந்துள்ளது என சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிதம்பரம் கோவில் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அல்ல.. விசிகவுக்கு ராமதாஸ் ஆதரவு..!

ரத்தன் டாடா, முரசொலி செல்வம் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்..!

காஷ்மீரில் திடீர் திருப்பம்.. காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்கும் தேசிய மாநாட்டு கட்சி..!

என் மீது வழக்கு போட்டால் சந்திக்க தயார்-தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் சவால்.....

அதிமுகவில் கருப்பாக இருந்த செந்தில் பாலாஜி திமுக சென்ற பின்னர் வெள்ளையாக மாறி விட்டார் - தமிழக முன்னாள் அமைச்சர் சொரத்தூர் ராஜேந்திரன் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments