Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரிட்டானியா ரொட்டிகளால் புற்றுநோய் அபாயம்: விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு

Webdunia
செவ்வாய், 24 மே 2016 (12:16 IST)
தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய ஆய்வில், பிரிட்டானியா நிறுவன ரொட்டிகளில் புற்று நோயை ஏற்படுத்தும் ரசாயனம் கலந்திருப்பதாக தெரியவந்துள்ளது.


 
 
இந்த ஆய்வில், பிரிட்டானியா, ஹார்வெஸ்ட் கோல்ட், கே.எப்.சி., பீசா ஹட், டொமினோஸ், சப்வே, மெக்டொனால்டு, சிலைஸ் ஆப் இத்தாலி உள்ளிட்ட 38 நிறுவனங்களின் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ரொட்டி, பன் போன்றவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
 
இதில், இந்த நிறுவனங்களின் ரொட்டி மற்றும் பன்களில் 84 சதவீத அளவிற்கு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ரசாயன பொருட்கள் என்று பட்டியலிடப்பட்ட பொட்டாசியம் புரோமேட் மற்றும் பொட்டாசியம் அயோடேட் போன்றவை இருப்பது உறுதி செய்யப்பட்டது.
 
எனவே பொட்டாசியம் புரோமேட் மற்றும் பொட்டாசியம் அயோடேட் ஆகியவற்றை ரொட்டிகளில் சேர்க்க தடை விதிக்கவேண்டும் என மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் பரிந்துரை செய்தது இந்த ஆய்வை மேற்கொண்ட அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்.
 
பிரபல நிறுவனங்களின் ரொட்டிகளில் புற்று நோயை ஏற்படுத்தும் ரசயானம் இருப்பது தெரியவந்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இது குறித்து விசாரணை நடத்த மத்திய சுகாதார அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மக்கள் பீதி அடைய வேண்டாம் எனவும்,  விரைவில் விசாரணை அறிக்கை வந்துவிடும் எனவும் கூறியுள்ளார் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேன் கூட்டில் கல் எறிய வேண்டாம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை..!

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை பெற்றோர்கள் வரவேற்கின்றனர்: எல் முருகன்

CBSE விதிமுறைகளில் மாற்றம்.. மாநில அரசின் உரிமையை பறிக்கின்றதா மத்திய அரசு?

கல்லூரி மாணவர்களிடம் போதை மாத்திரை விற்பனை.. 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

இந்த ஆண்டு நாடாளுமன்றம்.. அடுத்த ஆண்டு சட்டமன்றம்.. கமல்ஹாசன்

அடுத்த கட்டுரையில்
Show comments