இஸ்ரோ தலைவர் சோம்நாத்க்கு புற்றுநோய்.. அதிர்ச்சி தகவல்..!

Mahendran
திங்கள், 4 மார்ச் 2024 (16:36 IST)
இஸ்ரோ தலைவர் சோம்நாத் அவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இஸ்ரோ தலைவர் சோமநாத் அவர்களுக்கு சமீபத்தில் எடுத்த மருத்துவ சோதனையில் புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆதித்யா விண்கலம் செலுத்தப்பட்ட அன்று பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் சந்திராயன் 3 திட்டத்தின் போது அவருக்கு வயிற்றில் வலி இருந்ததாக கூறப்பட்டதை அடுத்து அவருக்கு மருத்துவ பல சோதனை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது 
 
இதனை அடுத்து அவர் புற்று நோய்க்கு கடந்த சில மாதங்களாக சிகிச்சை எடுத்து வருவதாகவும் கீமோதெரபி உள்பட ஒரு சில சிகிச்சைகள் மேற்கொண்ட நிலையில் தற்போது அவர் நலமாக நலமாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது 
 
இருப்பினும் புற்றுநோய் பாதிப்பு மீண்டும் அவரை தாக்காமல் இருப்பதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புற்றுநோய் பாதிப்பு இருந்த போதிலும் அதனை பொருட்படுத்தாமல் அவர் ஆதித்யா மற்றும் சந்திராயன் 3 விண்கலத்தை செலுத்தும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments