Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று ஏற்படும் சூரிய கிரகணம் வெறும் கண்களால் பார்க்கலாமா?

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (12:40 IST)
சூரியன்-பூமி-சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அது இன்று இரவு ஏற்படுகிறது. இந்தியாவில் தெரியாது என்றும் கூறப்படுகிறது.

 
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அது ஒரு அமாவாசை நாளன்று  ஏற்படும். சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும் நிலையில் முழு சூரிய கிரகணம் இன்று (21/08/2017) திங்கள் கிழமை அமாவாசை தினத்தில் இரவு இந்திய நேரப்படி இரவு 9.15 முதல் இரவு 2.34 வரை தோன்றுகிறது.
 
இந்த அரிய சூரிய கிரகணம் சூரியனை சந்திரன் முழுவதும் மறைத்து 3 நிமிடங்கள் வரை கிரகணம் ஏற்படும். இந்த தகவலை  'நாசா' மையம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவில் 14 மாகாணங்களில் முழுமையாக தெரியும். இந்தியாவில் தெரியாது  எனவும் கூறப்படுகிறது.
 
சூரிய கிரகணத்தின்போது முக்கியமாக கர்ப்பிணி பெண்களை இது பாதிக்கும் எனவும், ஆன்மீக ரீதியாக கூறப்படும் போது,  சாப்பிடக்கூடாது, தண்ணீர் குடிக்கக்கூடாது, வீட்டில் சமையல் செய்யக்கூடாது, நகம் வெட்டக்கூடாது என சாஸ்திரங்கள்  கூறுகின்றன.
 
கிரகணத்தின்போது சாப்பிடக்கூடாது, உணவு கெட்டுப்போய்விடும் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது. இதனை மகப்பேறு  நிலையில் உள்ள ஒரு பெண்மணியை வைத்து சோதனை செய்தபோது அவர்களுக்கு எந்தவிதமான தாக்கமும் இல்லை என்பது  நிரூபணமானதாக கூறப்படுகிறது.
 
இந்த சூரிய கிரகணம் 99 ஆண்டுகளுக்கு பிறகு வானில் ஒரு முழு சூரிய கிரகணம் தோன்ற உள்ளது. அதை வெறும் கண்களால்  பார்க்கக்கூடாது என நாசா மையம் அறிவுறுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 15 மாவட்டங்களில் கனமழை.. சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட்.. வானிலை எச்சரிக்கை..!

கள்ளச்சாராய வழக்கில் மேல்முறையீடா? சட்ட அமைச்சர் ரகுபதி முக்கிய தகவல்..!

'மணிப்பூர் கலவரத்துக்கு காரணமே ப.சிதம்பரம் தான்..' முதல்வர் பைரன் சிங் அதிர்ச்சி தகவல்..!

நவம்பர் 25,26ல் கனமழை.. முந்தைய நாள் இரவில் விடுமுறை அறிவிப்பு.. அமைச்சர் அன்பில் மகேஷ்

பாகிஸ்தான் கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments