Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காட்பரி இந்தியாவின் பெயர் மாறுகிறது

காட்பரி இந்தியாவின் பெயர் மாறுகிறது
, வியாழன், 17 ஏப்ரல் 2014 (12:23 IST)
கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் சுவை மிகுந்த சாக்லெட் மற்றும் பிற பொருட்களை தயாரித்த காட்பரி இந்தியா நிறுவனம் பெயர் மாற்றம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
கடந்த 1948 ஆம் ஆண்டு இந்தியாவில் தொடங்கப்பட்ட  காட்பரி இந்தியா நிறுவனம் Cadbury Dairy Milk, Bournville , 5-Star, Gems, Tang மற்றும் Oreo ஆகிய சாக்லெட், பிஸ்கட் வகைகளை தயாரித்து வருகின்றது. 
 
Mondelez International  நிறுவனம் கடந்த 2010 ஆம்  ஆண்டில் உலகளவிலான காட்பரி நிறுவனத்தைக் கையகப்படுத்தியது. இதனால் வரும் ஜூன் மாதம் முதல் காட்பரி இந்தியா, Mondelez India ஆக மாறுகிறது.  
இது தொடர்பாக காட்பரி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனு ஆனந்த் தெரிவிக்கையில், Mondelez International  நிறுவனம் கடந்த 2010 ஆம்  ஆண்டில் உலகளவிலான காட்பரி நிறுவனத்தைக் கையகப்படுத்தியபின் கடந்த ஆண்டு இறுதியில் மும்பை உப்பிட்டி பெட்டர் சாலையில் காட்பரி நிறுவனம் இயங்கிவரும்  தலைமை அலுவலகமும் ,  போர்ன்வில்லே குடியிருப்புகளும் வைர வியாபாரியான திலிப் லக்கியிடம் 400 கோடிக்கு விற்கப்பட்டுள்ளன. இதில் தான்  காட்பரி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் வசித்து வந்தனர். 
 
மொண்டலீஸ் என்ற பெயர் இந்தியாவில் அவ்வளவாக பிரபலமாகாத போதிலும் காட்பரியின் தயாரிப்புகளின் விற்பனை பாதிக்காது என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். 
 

Share this Story:

Follow Webdunia tamil