Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர் எண்ணுடன் ஆதாரை இணைக்க முடிவு!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (10:45 IST)
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் எனும் நிலை உள்ள நிலையில் தற்போது வாக்காளர் எண்ணுடன் ஆதாரை இணைக்க மத்திய முடிவு எடுத்துள்ளது. 

 
ஆம், வாக்காளர் எண்ணுடன் ஆதாரை இணைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனுடன் முதல் முறை வாக்காளர்கள் சேர்க்கையை எளிதாக்குவது உள்ளிட்ட சில முக்கிய தேர்தல் சீர்திருத்தங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
 
இதன்படி தற்போது 18 வயது நிரம்பியவர்கள் புதிய விதிகளின் படி ஆண்டுக்கு நான்கு முறை வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க முடியும். இதற்கு முன்னர் இது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் தேர்தல் சீர்திருத்த நடவடிக்கை மூலம் மின்னணு வாக்குப்பதிவு உள்ளிட்ட செயல்பாடுகளை அறிமுகம் செய்யவும் போலி வாக்காளர்களை களையவும் தேர்தல் ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகள் ஏற்க்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

ஒரு இந்து கூட பயங்கரவாதியாக இருக்க மாட்டார்கள்: பெருமையுடன் சொன்ன அமித்ஷா

பூமியை நோக்கி வருவது விண்கல் இல்லை.. ஏலியன் விண்கலம்? - அதிர்ச்சி கிளப்பும் விஞ்ஞானிகள்!

தேனி கூலி தொழிலாளி வங்கிக்கணக்கில் திடீரென வந்த ரூ.1 கோடி.. வருமான வரித்துறையினர் விசாரணை..

முக ஸ்டாலின் - பிரேமலதா திடீர் சந்திப்பு.. திமுக கூட்டணியில் இணைகிறதா தேமுதிக?

அடுத்த கட்டுரையில்
Show comments