Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு: அதிரடி அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (14:39 IST)
நாடு முழுவதும் சிஏ தேர்வுகள் ஒத்திவைப்பு
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இன்று மூன்றாவது நாளாக இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் இந்த ஊரடங்கை அனைத்து மக்களும் கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
 
இந்த நிலையில் அனைத்து மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன என்பது தெரிந்ததே. அதேபோல் கல்லூரிகளுக்கும் செமஸ்டர் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது அதிரடியாக நாடு முழுவதும் சிஏ தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக சற்று முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது 
 
இந்த அறிவிப்பின்படி நாடு முழுவதும் சிஏ தேர்வுகள் மே 2ஆம் தேதி முதல் மே 18ஆம் தேதி வரை நடக்க இருந்த நிலையில் தற்போது இந்த தேர்வுகள் ஜூன் 19 முதல் ஜூலை 4 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.ஏ.ஐ அமைப்பு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments