Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெஜ்ரிவாலுக்கு ரூ.364 அனுப்பிய தொழிலதிபர்: ஷூ வாங்கிக் கொள்ள அறிவுரை

கெஜ்ரிவாலுக்கு ரூ.364 அனுப்பிய தொழிலதிபர்: ஷூ வாங்கிக் கொள்ள அறிவுரை

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2016 (13:24 IST)
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த தொழிலதிபர் சுமித் அகர்வால் ரூ.364-க்கு வரைவோலை அனுப்பி, அந்த காசுக்கு ஷூ வாங்கிக்கொள்ள அறிவுரை வழங்கியுள்ளார்.


 
 
அண்மையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் போது பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹோலண்டே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்துக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பல முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
 
இந்த விருந்தில் கலந்து கொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் ஷூ அணிவதற்கு பதிலாக செருப்பு அணிந்து சென்றிருந்தார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த செயலுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த தொழில் அதிபர் சுமித் அகர்வால் அதிருப்தி தெரிவித்து, அவருக்கு ஷூ வாங்கிக்கொள்ள ரூ.364-க்கு வரைவோலை மற்றும் ஒரு கடிதமும் அனுப்பியுள்ளார்.
 
அவர அனுப்பிய கடிதத்தில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற சிறப்பு விருந்து நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொண்டீர்களே தவிர, ஜந்தர் மந்தரிலோ, ராம்லீலா மைதானத்திலோ நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஒரு பொது விளம்பரத்திற்காகத்தான் நீங்கள் செருப்பை பயன்படுத்துகிறீர்களா? ஒருவர் தனது வசதிக்கேற்ப உடையோ, செருப்போ அணிவது அவரது தனிப்பட்ட சுதந்திரம் தான். ஆனால், சில இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது தனிப்பட்ட விருப்பத்திற்கு அப்பாற்பட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
 
நீங்கள் ஒரு முதிர்ச்சியான மனிதர். சூழ்நிலைக்கேற்றார் போல் நடந்துகொள்ளுங்கள். இந்தியாவை மீண்டும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் சூழ்நிலையை ஏற்படுத்தாதீர்கள். அதற்காகவே நீங்கள் ஷூ வாங்கிக் கொள்ள இந்தத் தொகையை அனுப்புகிறேன். இவ்வாறு சுமித் அகர்வால் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments