Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலுக்காக மகளையே விஷம் வைத்துக் கொன்ற கொடூர தந்தை

Webdunia
வியாழன், 23 அக்டோபர் 2014 (17:05 IST)
கேரளாவை அடுத்த கோழிக்கோட்டில் கள்ளக்காதலிக்காக 14 வயது மகளை விஷம் வைத்துக் கொன்ற தந்தை கள்ளக்காதலியுடன் கைது செய்யப்பட்டார்.
 
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 14 வயது சிறுமி ஒருவர் விஷம் அருந்திய நிலையில் இறந்து கிடப்பது தெரிய வந்தது.
 
காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரித்ததில் எந்த தகவலும் கிடைக்காததால், அந்த சிறுமியின் உடலை அனாதை பிணம் என அடக்கம் செய்தனர்.
 
இந்நிலையில், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை காணவில்லை எனவும், அவருக்கு 14 வயது என்றும், அவரை தேடி கண்டுபிடித்து தரவேண்டும் எனவும் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், தனக்கும் கணவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு கணவர் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும் கூறி இருந்தார்.
 
இது தொடர்பாக கோழிக்கோடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஏற்கனவே அவர்களால் அனாதை பிணம் என புதைக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை அந்த பெண்ணிடம் காண்பித்தனர். இதில் சிறுமி அந்த பெண்ணின் மகள் என்பது உறுதியானது. இது குறித்து கோழிக்கோடு காவல்துறையினர் ரகசிய விசாரணையில் இறங்கினர்.
 
விசாரணையில் சிறுமியின் தந்தை பென்னி என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பினிதா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 
தந்தையும் கள்ளக்காதலியும் உல்லாசமாக இருந்ததை சிறுமி பார்த்துவிட்டார். இதை அவர் வெளியில் சொல்லிவிடுவார் என்று கருதி பென்னியும், அவரது கள்ளக்காதலி பினிதாவும் சேர்ந்து சிறுமிக்கு விஷம் கொடுத்து கொன்று உடலை தண்டவாளத்தில் வீசிச் சென்றது தெரிய வந்தது.
 
இதற்கு பென்னியின் மகனும், பினிதாவின் மகனும் துணை போனதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் 4 பேரையும் கோழிக்கோடு காவல்துறையினர் கைது செய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

Show comments