Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகளும் வருமான வரி கட்ட வேண்டும்: நிதி ஆயோக் உறுப்பினரின் சர்ச்சை பேச்சு

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (06:30 IST)
போதிய விளைச்சல் இல்லாமல், அப்படியே விளைந்தாலும் விளைந்த பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வங்கிக்கடனையும், மற்றவர்களிடம் வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல் தற்கொலை செய்து வரும் நிலையில் விவசாயிகள் தாங்கள் செய்யும் விவசாயம் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் வருமான வரி கட்ட வேண்டும் என்று நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் விவேக் தேப்ராய் தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்



 


இந்தியாவில் வருமான வரி வரம்புக்குள் வர வேண்டிய நபர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கான கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் விவேக் தேப்ராய் கூறியதாவது:

'வருமான வரி விதிப்பில் கிராமம், நகரம் மற்றும் விவசாயிகள் மற்றவர்கள் என்ற பாகுபாடு இருக்க கூடாது. விவசாயம் மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் வருமான வரி விதிக்கப்பட வேண்டும்' என்று கூறினார்

சமீபத்தில் பட்ஜெட் செய்தபோது மத்திய நிதிஉஅமைச்சர் அருண்ஜெட்லி, 'விவசாய வருமானத்தின் மீது வரி விதிக்கும் திட்டம் இல்லை' என்று கூறியிருந்த நிலையில் தற்போது விவேக் தேப்ராய் விவசாயம் மூலம் வரும் கிடைக்கும் வருவாய்க்கும் வருமான வரி விதிக்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பது முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments