Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவியின் அந்தரங்க இடங்களில் கையை வைத்து சில்மிஷம் செய்த சிறுவன்!

கல்லூரி மாணவியின் அந்தரங்க இடங்களில் கையை வைத்து சில்மிஷம் செய்த சிறுவன்!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2017 (13:42 IST)
மும்பையில் ரயில் நிலையம் ஒன்றில் தனியாக நின்று கொண்டிருந்த மாணவியிடம் சில்மிஷம் செய்து தகாத முறையில் நடந்து கொண்ட சிறுவனை அந்த மாணவி போலீசில் பிடித்து கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.


 
 
மும்பை சர்ச்கேட் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனியாக நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே நடைமேடையில் நின்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன் திடீரென அந்த மாணவியின் அந்தரங்க பகுதிகளில் கையை வைத்து சில்மிஷம் செய்து மாணவியை அசிங்கப்படுத்தியுள்ளான்.
 
மாணவியை அசிங்கப்படுத்திய சிறுவன் உடனடியாக அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளான். ஆனால் தைரியமான அந்த மாணவி சிறுவனை விரட்டி பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து போலீசார் சிறுவனை கைது செய்தனர்.
 
சிறுவனிடம் நடத்திய விசாரணையில் அவன் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவன் என்பதும் தற்போது மும்பை காலகோடா பகுதியில் வசித்து வருகிறான் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து சிறுவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?

முஃபாசா படத்துக்கு பூனைக்குட்டியா? மகேஷ் பாபு ரசிகர்கள் அட்டகாசம்!

உண்டியலில் விழுந்த ஐஃபோன் முருகனுக்கே சொந்தம்! பக்தருக்கு அதிர்ச்சி கொடுத்த கோவில் நிர்வாகம்!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் பட்டப்பகலில் படுகொலை..சட்டம் - ஒழுங்கு எங்கே.. அன்புமணி கேள்வி..!

செந்தில் பாலாஜி வழக்கில் தமிழக அரசிடம் இருந்து பதில் வரவில்லை: சுப்ரீம் கோர்ட் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்