Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசாம் மாநிலத்தில் 2 இடங்களில் குண்டு வெடிப்பு

Webdunia
திங்கள், 26 ஜனவரி 2015 (11:35 IST)
66 ஆவது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அசாம் மாநிலத்தில் டின்சுக்யா மாவட்டத்தில் டிக்போயி நகரில் தொடர்ச்சியாக 2 குண்டுகள் வெடித்துள்ளன.
 
ரயில் தண்டவாளம் அருகே உள்ள குப்பை கிடங்கில் புதைத்து வைத்திருந்த குண்டு முதலில் வெடித்தது. இதைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து குப்பை கிடங்கின் அடியில் உள்ள சாக்கடையில் மற்றொரு குண்டு வெடித்தது.
 
இந்த இரண்டு 2 குண்டுகளும் குறைந்த சக்தி திறன் கொண்டவையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இவை நாட்டு வெடிகுண்டுகளாகும் என்று தகவல்கள் தெரிவிக்கன்றன. எனவே, இந்த சம்பவம் பெரிய அளவில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
 
இந்நிலையில், குடியரசுத்தின விழாவை சீர் குலைக்கத் திட்டமா? என்னும் கோணத்தில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அதானி நிறுவனத்திற்கு முதலீடு கிடையாது! நார்வே எடுத்த அதிரடி முடிவு! – காரணம் என்ன தெரியுமா?

மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் பிளான் B என்ன? அமித்ஷா அளித்த அதிரடி பதில்..!

உயர்கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு

Show comments