Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் காரில் தலையை வெளியே நீட்டி ரசிகையுடன் செல்பி எடுத்த நடிகர்: போலீஸ் எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (06:42 IST)
பிரபல பாலிவுட் நடிகர் வருண்தவாண், மும்பையின் பிரதான சாலை ஒன்றில் ஓடும் காரில் தலையை வெளியே நீட்டி பெண் ரசிகை ஒருவருடன் செல்பி எடுத்த சம்பவத்திற்கு அவரை போலீஸார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.





நேற்று மும்பையில் வருண்தவான் காரில் சென்று கொண்டிருந்தபோது அவரது கார் அருகே இன்னொரு காரில் சென்று கொண்டிருந்த பெண் ரசிகை ஒருவர் வருண்தவானுடன் செல்பி எடுக்க விரும்புவதாக தெரிவித்தார்.

அந்த ரசிகையின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்த வருண்தவான் ஓடும் காரில் தலையை வெளியே நீட்டினார். அதேபோல் அந்த பெண்ணும் ஓடும் காரில் தலையை வெளியே நீட்ட இருவரும் தங்களுடைய மொபைல்போனில் செல்போன் எடுத்து கொண்டனர்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மும்பை போலீஸ் வருண்தவானை அழைத்து கடுமையாக எச்சரித்தனர். இதனையடுத்து வருண்தவான் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘கார் ஓடும் போது நான் ‘செல்பி’ எடுக்கவில்லை. சிக்னலில் நின்றபோது தான் எடுத்தேன். எனது ரசிகையின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று தான் இப்படி நடந்து கொண்டேன். இனி இதுபோன்ற செயலுக்கு ஊக்கம் அளிக்க மாட்டேன். பாதுகாப்பை மனதில் வைத்து கொள்வேன்’ என தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments