Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரபல பாலிவுட் நடிகர் சசி கபூர்

Webdunia
திங்கள், 22 செப்டம்பர் 2014 (15:37 IST)
பிரபல பாலிவுட்  நடிகர் சசிகபூர் சுவாச கோளாறு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  
 
சசிகபூர் இந்திய சினிமாவின் முன்னோடியான பிரிதிவி ராஜ் கபூரின் மகனும் ராஜ் கபூரின் சகோதரரும் ஆவார். இந்தி மொழியில் 160 க்கும் மேற்பட்டப் படங்களில் நடித்துள்ளார்.
 
இதில் ஆவாரா, தீவார், சத்யம் சிவம் சுந்தரம், கபி.கபி, ஆகியவை சசிகபூர் நடித்தவைகளில் மிகவும் பிரபலமானவை.
 
அவருக்குக் குணால் கபூர், கரன்கபூர் என்ற மகன்களும், சந்தனா கபூர் என்ற மகளும் உள்ளனர். இவர்களில் குணால் கபூரும் நடிகர் ஆவார்.
 
சசிகபூரின் மனைவி ஜெனீபர் ஏற்கனவே இறந்து விட்டார். 160 க்கும் மேற்பட்டப் படங்களில் நடித்துள்ள சசிகபூர் இதுவரை 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

Show comments