மங்களூரில் கிணற்றில் இருந்து கொதிக்கும் நீர் ஊற்றெடுத்து வருவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அதை பெரும் பரபரப்புடன் காண்கின்றனர்.
மங்களூருவில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள போலாலி என்னும் ஊரில் உள்ள ராஜ ராஜேஸ்வரி கோவிலின் பின்பகுதியில் உள்ள வீட்டின் கிணற்றில் சூடான தண்ணீர் ஊற்றெடுக்கிறது. இந்த செய்தி இணையம் மூலம் பரவவே அங்கு மக்கள் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர்.
இது தவறான குறியீடு என்றும், தெய்வத்திற்கு ஆகாதது என்றும் கருதுகின்றனர். இப்போது வரை இதற்கான காரணம் தெரியவில்லை. கிணற்று தண்ணீர் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
புவியியல் அல்லது ரசாயன மாற்றமே காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். யாராவது ரசாயனத்தை கிணற்றில் கலந்திருப்பார்கள், அது போன்று கலந்திருந்தால் இரண்டு, மூன்று நாட்களில் கிணறு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்றும் கூறியுள்ளனர். ஆனால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள கிணறுகளில் தண்ணீர் சாதாரணமாகவே உள்ளது.