Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித்ஷா சென்னைக்கு வரும்போது கருப்பு கொடி காட்டுவோம்: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு..!

Siva
வியாழன், 30 ஜனவரி 2025 (17:39 IST)
முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவின் இல்ல திருமண விழா சென்னையில் நடைபெற உள்ளதை எடுத்து இந்த விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வருகை தந்தால் அவருக்கு கருப்பு கொடி காட்டுவோம் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முழுக்க முழுக்க திருமண விழாவிற்காக மட்டுமே அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வருகை தர இருப்பதாகவும் சென்னை அருகில் உள்ள மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள இந்த திருமணத்தில் கலந்து கொண்டு அவர் டெல்லி திரும்புவார் என்றும் அவரது இந்த வருகையின் போது அரசியல் சார்ந்த நிகழ்ச்சி எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசிய மத்திய அமைச்சர் அமைச்சர் அமித்ஷா, சென்னை வந்தால் அவருக்கு கருப்பு கொடி காட்டி போராட்டம் காட்டுவோம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதனால் அமித்ஷா வருகையின் போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. புதினிடமும் பெருமை பேசிய டிரம்ப்..!

பிரசவ வலியால் துடித்த பெண்.. ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்