Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலர்களிடத்தில் பாஜக அத்துமீறல்; விஷ்வ ஹிந்து பரிஷத் மிரட்டல்

காதலர்களிடத்தில் பாஜக அத்துமீறல்; விஷ்வ ஹிந்து பரிஷத் மிரட்டல்
, வியாழன், 30 அக்டோபர் 2014 (11:04 IST)
கேரளாவில் முத்தப் போராட்டம் நடத்தப்போவதாகக் கூறியுள்ள காதலர்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
 
கோழிக்கோடு மையப்பகுதியில் 'டவுண் டவுண்' என்ற ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் கடந்த சில தினங்களுக்கு முன் சில காதல் ஜோடிகளின் வரம்பு மீறிய ஆடல், பாடல் காட்சிகள், உள்ளூர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதையடுத்து பாஜகவின் இளைஞர்  அமைப்பான யுவமோர்ச்சா தொண்டர்கள் அந்த ஓட்டலை சூறையாடினார்கள். இந்த சம்பவத்துக்கு அந்த ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களும், பிரபல மலையாள சினிமா இயக்குநர் ஆஷிக் அபு உட்பட சில சினிமா ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
ஓட்டலை சூறையாடியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொச்சியில்  பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடமான மரைன் டிரைவ் பகுதியில்  வரும் 2ஆம் தேதி மாலை, முத்தம் கொடுத்து போராட்டம் நடத்தப் போவதாக கூறி பேஸ்புக்கில் வேகமாக தகவல்கள் பரிமாறப்பட்டு  வருகிறது.
 
‘கிஸ் ஆப் லவ்‘ என பெயரிடப்பட்டுள்ள இந்த பகிரங்க முத்த ப் போராட்டத்துக்கு பேஸ்புக்கில் நேற்று வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  லைக்குகள் கிடைத்துள்ளன. முத்தப் போராட்டத்தை நடத்த  விடமாட்டோம் என்று விஸ்வ இந்து பரிஷத் உட்பட பல இந்து  அமைப்புகள் அறிவித்துள்ளன. இது குறித்து கொச்சி காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil