Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் ஆதாயத்திற்காக பாஜக கபட நாடகம் - மாயாவதி குற்றச்சாற்று

Webdunia
வியாழன், 8 மே 2014 (19:25 IST)
வாரணாசியில் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பாஜக நடத்திய போராட்டம் தேர்தல் ஆதாயத்திற்காக நடத்தப்படும் கபட நாடகம் என மாயாவதி குற்றம்சாற்றியுள்ளார்.
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, "உத்தர பிரதேசத்தில் இன்னும் 18 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சமாஜ்வாடியின் முலாயம் சிங் யாதவ் ஆகிய பெரிய தலைகள் இத்தேர்தலில் களம் காண்கின்றனர். மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் வாக்காளர்களை கவரும் முயற்சி பலன் அளிக்காததால் இது போன்ற தேர்தல் ஆதாய நாடகங்களை பாஜக நடத்திவருகிறது" என்று கருத்து தெரிவித்தார்.
 
மேலும், கங்கையில் நரேந்திர மோடியின் சிறப்பு பூஜைக்கான ஏற்பாடும் தேர்தல் ஆதாய நாடகமே என அவர் கூறினார். கிழக்கு உத்தர பிரதேசத்தில் பாஜகவிடம் இருந்து முஸ்லீம்களை பாதுகாக்க சமாஜ்வாடியால் மட்டுமே முடியும் என்ற ஒரு தோற்றத்தை சமாஜ்வாடி உருவாக்கி வருவதாகவும் ஆனால் அது உண்மை நிலை அல்ல என்றும் மாயாவதி குற்றம்சாற்றியுள்ளார்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments