கிறிஸ்துவர்கள் அந்நியர்கள்: பாஜக எம்.பி. சர்ச்சை கருத்து!

Webdunia
சனி, 7 ஜூலை 2018 (12:03 IST)
பாஜக எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் எப்போதும் சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு சிக்கிக்கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது பா.ஜ.க. எம்.பி. கோபால் ஷெட்டி வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
மராட்டிய மாநிலம் மலாடில் முகமது நபி பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் மும்பை வடக்கு தொகுதியை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. கோபால் ஷெட்டி கலந்து கொண்டார்.
 
இந்த விழாவில் அவர் பேசிய சில விஷ்யங்கள் இப்போது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியது பின்வருமாறு, இந்திய விடுதலை போராட்டத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தந்தனர். 
 
இதில் கிறிஸ்தவர்களுக்கு எந்த பங்கும் இல்லை. கிறிஸ்தவர்கள் என்பவர்கள் ஆங்கிலேயர்கள். அந்நியர்களான அவர்களுக்கு இந்திய விடுதலை போராட்டத்தில் சிறு பங்கு கூட கிடையாது என் பேசினார். 
 
இந்த பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது மேலும் இவர் பேசிய வீடியோவும் இணையதலத்தில் அதிகம் பகிரப்பட்டு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. 
 
பாஜக எம்.பி.யின் சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்ததோடு தனது கருத்துக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்முறையாக Gen Z போராட்டத்திற்கு ராணுவம் ஆதரவு! - மடகாஸ்கரில் ஆட்சிக்கவிழ்ப்பு!

வருமானமே இல்லை.. என்னை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்கள்: சுரேஷ் கோபி கோரிக்கை..!

'ஃபயர் பிரீத்திங்' சாகச விளையாட்டில் விபரீதம்.. இரவு விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

ஆர்.எஸ்.எஸ் முகாமில் பாலியல் துஷ்பிரயோகம்.. இறப்பதற்கு முன் ஐடி ஊழியரின் கடைசி பதிவு..!

ஊழல் குற்றச்சாட்டு! அதானி மீது இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை! அமெரிக்கா குற்றச்சாட்டு!’

அடுத்த கட்டுரையில்
Show comments