Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோதிமணி எம்பி என்னை அடித்துவிட்டார்: புகார் செய்த காங்கிரஸ் எம்பி

Webdunia
புதன், 4 மார்ச் 2020 (09:15 IST)
ஜோதிமணி எம்பி என்னை அடித்துவிட்டார்:
காங்கிரஸ் எம்பிக்கள் தங்களைத் தாக்குவதாகவும், பெண் எம்பிக்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்வதாகவும் ஏற்கனவே பாஜக பெண் எம்பியும் அமைச்சருமான ஸ்மிருதி இரானி புகார் கூறிய  நிலையில் தற்போது இன்னொரு பாஜக பெண் எம்பியான சங்கீதா சிங் என்பவர் நாடாளுமன்றத்தில் தன்னை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி எம்பி தாக்கியதாக புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தொடங்கிய நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மக்களவை எம்பியான ஜோதிமணி எம்பி அவர்கள் தன்னை தாக்கியதாக சங்கீதா சிங் என்பவர் புகார் கூறியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மற்றொரு காங்கிரஸ் எம்பியான ரம்யாவும் தன்னை தாக்கியதாக அவர் கூறியுள்ளார் 
 
இரண்டு காங்கிரஸ் எம்பிக்கள் தாக்கியதால் ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும், அந்த சிகிச்சை குறித்த ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் சங்கீதா சிங் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதாக வெளிவந்துள்ள புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுரித்து சபாநாயகர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு! - கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த மக்கள்

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments