Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹத்ராஸ் போறதுக்கு பதிலா நீங்க பஸ்தர் போகலாமே? – ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி கேள்வி!

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (10:52 IST)
ஹத்ராஸ் செல்ல முயன்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து பேசிய பாஜக எம்.பி ஒருவர் ராகுல் பஸ்தர் போகாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தர பிரதேசம் ஹத்ராஸ் பகுதியில் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆளும் பாஜக அரசுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், இந்த வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பெண்ணுக்கு நீதி கிடைக்க அனைத்தையும் உ.பி அரசு செய்தும் தொடர்ந்து காங்கிரஸ் தங்கள் மீது குற்றச்சாட்டு வைத்து வருவதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள பாஜக எம்.பி மோகன் மாண்டவி “ஹத்ராஸில் எந்த விதமான அத்துமீறல்களும் நடைபெறவில்லை. நடக்காத ஒன்றை நடந்ததாக காட்டவே காங்கிரஸினர் தொடர்ந்து ஹத்ராஸ் செல்கின்றனர். நீதிக்காக முறையிடும் காங்கிரஸ் தலைவர்கள் பஸ்தரில் பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டது பற்றி பேசாமல் இருப்பதும், அங்கு செல்லாமல் இருப்பதும் ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்