மகாராஷ்டிரா மாநில பாஜக எம்.எல்.ஏ. நரேந்திர மேக்தாவின் மனைவி மும்பை அருகே பள்ளி நுழைவு வாயிலில் நின்றுக்கொண்டிருந்த ஆட்டோ மீது காரை மோதினார்.
மகாராஷ்டிரா மாநில பாஜக எம்.எல்.ஏ. நரேந்திர மேக்தா அவரது மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக 5 கோடி மதிப்புள்ள அதிவேக காரை வழங்கியுள்ளார்.
நேற்று அந்த காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றபோது, மேக்தாவின் மனைவி பள்ளி நுழைவு வாயிலில் நின்றுக்கொண்டிருந்த ஆட்டோ மீது காரை மோதினார்.
விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது. விபத்து வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரவியது.
இதுகுறித்து விளக்கமளித்த நரேந்திர மேக்தா, எனது மனைவியின் கார் ஆட்டோவை சும்மா தொட்டது, என்று கூறியுள்ளார்.