Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 எம்எல்ஏகள் காங்கிரஸ் பக்கம்: பாஜகாவுக்கு அடுத்த அடி!

Webdunia
புதன், 16 மே 2018 (13:52 IST)
கர்நாடக மாநிலத்தில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால், கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடிக்கிறது. திடீர் திருப்பமாக,  மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளது.  
 
முதலில் 4 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மாயம் என செய்தி வெளியானது. அதன்பின், ம.ஜ.த எம்.எல்.ஏக்கள் 2 பேர் மாயம் என செய்தி வெளியானது. தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 12 பேர் மாயம் என செய்தி வெளியானது. 
 
தற்போது யாரும் எதிர்ப்பார்க்காத வகையில், பாஜகவின் 6 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் பக்கம் உள்ளதாக காங்கிரஸ் முன்னாள் அமைச்சரான எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார். 
 
இதுகுறித்து அவர் கூரியதாவது, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் எங்களுடன்தான் உறுதியாக நிற்கிறார்கள். யாரும் வேறு பக்கம் போக மாட்டார்கள். ஆனால், பாஜகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள்தான் காங்கிரஸுடன் தொடர்பில் உள்ளனர். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என தெரிவித்து பாஜகவிற்கு ஷாக் கொடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments