சட்டசபையில் பேச அனுமதிக்காததை கண்டித்து பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பெஞ்சின் மீது ஏறி நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் வீடியோவாக வெளிவந்துள்ளது.
டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் ஆட்சி நடைபெற்று வருகிறது. நேற்று, அங்கு நடந்த சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது, பாஜக எம்.எல்.ஏ விஜேந்தர் குப்தா சில பிரச்சனைகளை பற்றி பேச எழுந்தார்.
ஆனால், அவருக்கு சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த அவர், சபாநாயகருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதோடு, மேஜை மீது ஏறி நின்று தனது எதிர்ப்பை தெரிவித்தார். இதனால், சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது. அவருடைய செய்கையை பார்த்து அர்விந்த் கெஜ்ரிவாலும் சிரித்தார்.
அதன்பின் அவரை அர்விந்த் கெஜ்ரிவால் கண்டித்தார். அவரின் செயலால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Courtesy : News exclusive