Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூய்மை இந்தியா போஸ்டர் மீது பிஸ்... அடித்த பாஜக அமைச்சர்

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (11:29 IST)
ராஜஸ்தானில் பாஜக அமைச்சர் ஒருவர் பிரச்சாரக்கூட்டத்தில் தூய்மை இந்தியா போஸ்டர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ராஜஸ்தானில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் பாஜக சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
 
அதன் ஒரு பகுதியாக அஜ்மீர் பகுதியில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. அப்போது பாஜக அமைச்சர் ஷாம்பு சிங் கடேசர், பொதுவெளியில் சிறுநீர் கழித்தார். இதில் ஹைலைட் என்னவென்றால், பாஜகவின்  'துாய்மை இந்தியா' திட்டம் குறித்த போஸ்டர் மீது அவர் சிறுநீர் கழித்தது தான்.
 
இதுகுறித்து விளக்கமளித்த அமைச்சர் கழிப்பறை வசதி இல்லாததால் தான் திறந்த வெளியில் சிறுநீர் கழித்தேன் என்றும் அது யாரையும் பாதிக்காது எனவும் தனது தப்பை நியாயப்படுத்தி பேசினார். சந்துக்கு சந்து தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் பாஜக, அமைச்சரின் இந்த தூய்மையற்ற செயலுக்கு என்ன பதிலளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
அமைச்சர் பிஸ் அடித்த காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகி பலரது கேலிக்கும் கிண்டல்களுக்கும் ஆளாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments