Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாய்லெட் திறக்க வந்த பாஜக பெண் அமைச்சர் தெறித்து ஓட்டம்! காரணம் இதுதான்! – வைரலாகும் வீடியோ!

Webdunia
புதன், 31 மே 2023 (15:04 IST)
டெல்லியில் உள்ள கோவில் ஒன்றில் கழிவறை மற்றும் குளிரூட்டப்பட்ட அறைகளை திறந்து வைக்க வந்த பாஜக பெண் அமைச்சர் பத்திரிக்கையாளர்களுக்கு பதில் அளிக்காமல் ஓடிய வீடியோ வைரலாகியுள்ளது.



பாஜக எம்.பியும், இந்திய மல்யுத்த சம்மௌனத்தில் தலைவருமாக இருந்து வருபவர் பிரிஜ்பூஷண் சரண்சிங். இவர்மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து விருது பெற்ற பல மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட சென்ற மல்யுத்த வீராங்கனைகளை போலீஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசப்போவதாக வீராங்கனைகள் அறிவித்தனர். ஆனால் இந்த பிரச்சினை குறித்து பாஜக பிரபலங்கள் பேசுவதை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள அனுமன் கோவிலில் புதிதாக கட்டப்பட்ட குளிரூட்டப்பட்ட அறைகள் மற்றும் கழிப்பறைகளை திறந்து வைக்க பாஜக பெண் அமைச்சர் மீனாக்‌ஷி லெக்கி சென்றிருந்தார். அங்கு அவரிடம் பத்திரிக்கையாளர்கள் சிலர் மல்யுத்த வீராங்கனைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

உடனே ஓடத்தொடங்கிய மீனாக்‌ஷி லெக்கி பத்திரிக்கையாளர்கள் துரத்தி வந்து கேள்வி கேட்டும் பதில் அளிக்காமல் ஓடி சென்று காரில் ஏறி சென்று விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்