Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான் மாணவிக்கு டாக்டர் சீட் - பாஜக அமைச்சர் அதிரடி

பாகிஸ்தான் மாணவிக்கு டாக்டர் சீட் - பாஜக அமைச்சர் அதிரடி

பாகிஸ்தான் மாணவிக்கு டாக்டர் சீட் - பாஜக அமைச்சர் அதிரடி
, செவ்வாய், 31 மே 2016 (12:05 IST)
பாகிஸ்தான் மாணவிக்கு எம்பிபிஎஸ் சீட் வாங்கிக் கொடுத்துள்ளார் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
 

 
பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணம், ஹைதராபாத்தை சேர்ந்தவர் மஷால் மகேஸ்வரி (19).பாகிஸ்தானில் இந்துக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று பயந்து, மஷால் மகேஸ்வரியும், அவரது பெற்றோர்களும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூருக்கு குடிபெயர்ந்தனர்.
 
இந்த நிலையில், இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதினார். அதில், மகேஷ்வரி 91 சதவீத மதிப்பெண்கள் பெற்றார். மேலும், தனது தந்தை, தாய் போலவே டாக்டராக வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்.
 
ஆனால், அவர் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதுவதில் சட்ட சிக்கல் ஏற்பட்டது. இதனால், இந்த விவகாரத்தில் தனக்கு உதவுமாறு பிரதமர் மோடிக்கு கோரிக்கை மனு அனுப்பினார். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க பிரமதர் மோடி, சுஷ்மா ஸ்வராஜ் -க்கு உத்தரவிட்டார்.
 
இதனையடுத்து, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டர் மூலம் அந்த மாணவியை தொடர்பு கொண்டார். மேலும், கர்நாடகாவில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கிக் கொடுத்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் எனது மருமகளை கொடுமைப்படுத்தினேனா? பிரபல நடன இயகுனர் பரபரப்பு பேட்டி