Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாக் - சீனா ஏவி விட்ட விஷ வாயு: பேஷாய் பேசும் பாஜக மூத்த தலை!

Webdunia
புதன், 6 நவம்பர் 2019 (11:36 IST)
டெல்லி காற்று மாசுக்கு காரணம் பாகிஸ்தான் அல்லது சீனா விட்ட விஷ வாயுவாக இருக்கலாம் என பாஜக மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். 
 
பாஜக மூத்த தலைவரான வினீத் அகர்வால் ஷர்தா, டெல்லி காற்று மாசு குறித்து சமீபத்தில் பேசியிருந்தார். அவர் கூறியதாவது, ஹரியானா மற்றும் பஞ்சாபில் விவசாய கழிவுகளை எரிப்பதால்தான் டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது என்று கூறும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை நான் கண்டிக்கிறேன். 
 
இந்தியாவில் காற்றை மாசுபடுத்த அண்டை நாடுகளான பாகிஸ்தான் அல்லது சீனா விஷ வாயுவை வெளியிட்டிருக்கலாம். பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பேற்ற பிறகு இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் அனைத்து நடவடிக்கைகளும் முறியடிக்கப்பட்டுள்ளது. 
இந்த விரக்தியில் பாகிஸ்தான் விஷ வாவுவை இந்தியாவில் வெளியிட்டு உள்ளதா என விசாரிக்க வேண்டும். ஆனால், யாரும் இது குறித்து கவலை பட வேண்டாம்.  கிருஷ்ணராக இருந்து பிரதமர் மோடியும், அர்ஜுனனாக இருந்து அமித் ஷாவும் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பார்கள் என  பேசியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments