Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு போட்டியே இல்லை- உள்துறை அமைச்சர் அமித் ஷா

Webdunia
செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (15:02 IST)
வரும் 2024  நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு போட்டியேயில்லை என்று  மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு  நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று பாஜக சார்பில் பிரதமராகப் பதவியேற்றார்.

இதையடுத்து, 17வது பாராளுமன்றத் தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு  நடைபெற்றது. இதில், பாஜக கூட்டணி 303 இடங்களில் வெற்றி பெற்று  இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி, மோடி  2 வது முறையாக பதவியேற்றார்.

இந்த நிலையில் அடுத்தாண்டு பொதுத்தேர்தல் வரவுள்ளது. இதில், பாஜகவுக்கு போட்டியேயில்லை என்று அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜவுக்கு போட்டியேயில்லை என்று நம்புகிறோம். பிரதமருடன் சேர்ந்து நாடு முன்னேறி வருகிறது.  பாஜகவின் வளர்ச்சி அரசியலி மக்கள் ஏற்றுள்ளனர். அதேபோல், ராஜஸ்தான், கர் நாடக, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மா நில சட்டசபைத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments