Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமரிந்தர் சிங்கின் கட்சியுடன் பாஜக கூட்டணி!!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (12:25 IST)
பாரதிய ஜனதா கட்சி, முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கின் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அறிவிப்பு. 

 
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் சித்துவுக்கு வெளிப்படையான மோதல் போக்கு இருந்து வந்தது. இதனிடையே அமரீந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதன் பின்னர் அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்கினார். ஆம், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை அவர் தொடங்கினார். 
 
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியுடன் அமரிந்தர் சிங்கின் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் பட்சத்தில், அடுத்தாண்டு நடைபெறும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் என முன்னர் தெரிவித்தார். 
 
அந்த வகையில் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கின் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா என 3 அணிகள் மோதும் மும்முனை போட்டியாக பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் அமைய உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை: தொண்டர்களுக்கு துரை வைகோ முக்கிய வேண்டுகோள்..!

சென்னையில் இன்று வெயில் உக்கிரமாக இருக்கும்: தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை..!

நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி சம்மன்.. விசாரணைக்கு ஆஜராக உத்தரவு..!

ஒரு தமிழர் முதல்வராவதை பார்த்து சகித்து கொண்டிருக்க மாட்டோம்: ஒடிஷாவில் அமித்ஷா ஆவேசம்..!

அரசியல் வியாதி உள்ள அண்ணாமலையுடன் எப்படி விவாதிப்பது? ஜெயக்குமார் பதிலடி

அடுத்த கட்டுரையில்
Show comments