சுதந்திர போராட்டத்தில் பாஜவினர் பங்கேற்கவில்லை, நாங்கள் தான் சாதித்தோம் என்று காஸ்கிரஸ் முன்னாள் எம்பி ரம்யா கூறியுள்ளார்.
ரம்யா பாகிஸ்தான் நல்ல நாடு என்று கூறிய கருத்துக்கு, பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராடாங்கள் நடத்தினர். பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்றத்தில் ரம்யா மீது தேச விரோத வழக்கு பதிவு செய்தார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் ரம்யாவை எதிர்த்து, அவரது உருவ பொம்மையெல்லாம் எரித்து போராட்டம் நடத்தினர். அதன்பின்னர் ரம்யா, நான் மன்னிப்பு கேட்க போவதில்லை என்று கூறினார்.
தற்போது ரம்யா ஆர்,எஸ்.எஸ் மீது திரும்பியுள்ளார். பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த ரம்யா, இந்திய சுதந்திர போராட்டத்தில் பாஜகவினர் பங்கேற்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஆகிலேயர்களுக்கு ஆதரவாக செயல்பட்டனர். காங்கிரஸ் அமைப்பால் தான் சுதந்திரம் கிடைத்தது. நாங்கள்தான் சாதித்தோம். அவர்களது பங்கு ஏதும் இல்லை.