Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்காக பாஜக - காங்கிரஸ் கூட்டணி: தேசிய அரசியலில் அதிர்வலை...

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (16:15 IST)
மகராஷ்டிரா ஊராட்சி தலைவர் தேர்தலுக்காக காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் அதிருப்தியில் உள்ளார். 

மகராஷ்டிரா கோண்டியா மாவட்டத்தில் அண்மயைில் நடைபெற்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அடுத்தபடியாக, காங்கிரஸ் 17 இடங்களிலும், பாஜக 16 இடங்களிலும் வெற்றி பெற்றன. 
 
ஊராட்சித் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்காக தேசியவாத காங்கிரஸுடன் காங்கிரஸ் கட்சி தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், இதற்கு ஒரு முடிவு வராமல் இழுபறி நீடித்து வந்தது. 
 
இதனால், யாரும் எதிர்பாராத வகையில் பாஜகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. கோண்டியா மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளருக்கு பாஜக ஆதரவளித்தது. 
 
அதேபோல், துணை தலைவர் பதவிக்கு நிறுத்தப்பட்டிருந்த பாஜக வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவளித்தது. இந்த நிகழ்வு காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எனவே, இது குறித்து விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மகாராஷ்டிரா காங்கிரஸ் கமிட்டிக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments