Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உளவாளி ஜோதிக்கும், கேரள முதல்வர் மருமகனுக்கும் தொடர்பா? பாஜக பகீர் குற்றச்சாட்டு..!

Siva
ஞாயிறு, 1 ஜூன் 2025 (08:50 IST)
பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்ட ஹரியானா மாநிலத்தை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்கோத்ராவுக்கும், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் மருமகனுக்கும் தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யூடியூபில் டிராவல் சேனல் நடத்தி வந்த ஜோதி மல்கோத்ரா, பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் உள்ள லேப்டாப், மொபைல் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பாகிஸ்தானில் உள்ள தூதரக அதிகாரிகள் அவருக்கு உதவி செய்ததாகவும், பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி சீனாவுக்கும் அவர் பயணம் செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கேரளாவுக்கு ஜோதி சுற்றுலா பயணமாக வந்த போது, அவருக்கு முழுக்க முழுக்க கேரள மாநில சுற்றுலாத் துறை ஸ்பான்சர் செய்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

ஜோதியின் கண்ணூர் பயணத்தின் போது, சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ள முதலமைச்சர் பினராயி விஜயனின் மருமகன் முகமது ரியாஸ் தான் அவருக்கு ஸ்பான்சர் செய்ததாகவும், இருவரும் சந்தித்ததாகவும், அதன் உண்மையான நோக்கம் என்ன என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் 47 பேர் கைது: தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம்!

நாளை அமித்ஷா சட்டீஸ்கர் வருகை.. இன்று 103 நக்சலைட்டுகள் சரண்; சரணடைந்தவர்களுக்கு ரூ.1.06 கோடி பரிசு..!

டெல்லி சாமியார் பாலியல் வழக்கு விவகாரம்: 3 பெண்கள் கைது! பெரும் பரபரப்பு..!

காந்தி ஜெயந்தி தினத்தில் காந்தி சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு! பாஜகவால் சர்ச்சை..!

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு.. இன்னும் உயருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments