Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாலியை அடகு வைத்து கழிவறை கட்டிய பெண் : பீகாரில் ஆச்சர்யம்

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2016 (16:46 IST)
கணவன் கட்டிய தாலியை அடகு வைத்து, வீட்டில் கழிவறை கட்டிய ஒரு பெண்ணைப் பற்றி செய்தி வெளியாகியிருக்கிறது. 


 

 
பீகாரில் உள்ள ரோகத் மாவட்டத்தில் பாராக்கானா என்ற ஒரு கிராமம் உள்ளது. அங்கு பெரும்பாலான வீடுகளில் கழிவறை கிடையாது. அங்கு வசித்து வருபவர் போல்குமாரி. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் சமையல் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். 
 
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து தூய்மை இந்தியா திட்டத்தில் பெரிதும் ஈர்க்கப்பட்ட போல்குமாரி, தனது வீட்டிலும் கழிப்பறை ஒன்றை கட்ட வேண்டும் என்று விரும்பினார். அவரதும் கணவரும் ஒரு கூலித் தொழிலாளி என்பதால், வேறு வழியில்லாமல், தன்னுடைய தாலியை அடமானம் வைத்து, தான் வசிக்கும் வீட்டில் கழிவறை கட்ட தொடங்கினார். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, அவர் கழிப்பறையை கட்டி முடித்தார்.
 
இதைக் கேள்விபட்ட அதிகாரிகள், அவரை கழிவறை திட்ட பணிகளுக்கு தூதராக நியமித்து உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - பெங்களூரு பயண நேரம் 30 நிமிடங்கள் தான்.. வருகிறது ஹைப்பர்லூப் ரயில்..!

மூடப்படுகிறதா பூந்தமல்லி பேருந்து நிலையம்.. புதிய பேருந்து நிலையம் எங்கே?

அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும் முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

இந்தியாவை தோற்கடிப்பேன், இல்லையேல் பெயரை மாற்றிக் கொள்வேன்: பாகிஸ்தான் அதிபர்

எலி ஸ்ப்ரேவை செண்ட் என அடித்து விளையாடிய சிறுவர்கள்! புதுக்கோட்டையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments