ரயிலுக்கு தீ வைத்த விவகாரம்; போராட்டத்தை தூண்டிவிட்ட யூட்யூபர்! – போலீஸார் வழக்குப்பதிவு!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (09:32 IST)
பீகாரில் ரயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி ரயிலுக்கு தீ வைத்த வழக்கில் யூட்யூபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரயில்வே துறையில் தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கான தேர்வு முடிவுகள் ஜனவரி 15ம் தேதி வெளியாகின. தேர்வு முடிவுகள் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும் என எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு 2ம் நிலை  தேர்வுகள் நடைபெறும் என்ற ரயில்வே வாரியத்தின் அறிவிப்பு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. 

பீகார் மாநிலம் கயா ரயில் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேர்வர்கள் திடீரென வன்முறையில் இறங்கினர். கயா ரயில் நிலையத்தினுள் புகுந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலுக்கு தீ வைத்தனர். இந்நிலையில் வன்முறையை தூண்டியதாக பீகாரை சேர்ந்த யூட்யூபரும், தேர்வு பயிற்சியாளருமான கான்சார் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலரை விசாரித்ததில் கான் சார் தங்களை போராட்டம் நடத்துமாறு ஊக்கப்படுத்தியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சாலையில் திரண்டு போராடினால் மட்டுமே தேர்வு ரத்து செய்யப்படும் என கான் சார் பேசிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments