Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தல் அதிகாரிகளுடன் லாலு வாக்குவாதம் - தகராறில் கேமரா உடைப்பு

தேர்தல் அதிகாரிகளுடன் லாலு வாக்குவாதம்  - தகராறில் கேமரா உடைப்பு
, திங்கள், 5 மே 2014 (10:35 IST)
பீகாரில் ராஷ்டிரீய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின்  மனைவி ராப்ரி தேவியின் காரை சோதனையிட்ட அதிகாரிகளுக்கும் ராஷ்டிரீய ஜனதாதள கட்சி தொண்டர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
 
மே மாதம் ஏழாம் தேதி வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் சரண் நாடாளுமன்ற தொகுதியில் ராஷ்டிரீய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின்  மனைவி ராப்ரி தேவி போட்டியிடுகிறார்.
 
இதற்காக வாக்காளர்களிடம் வாக்கு சேகரிக்க சென்ற ராப்ரி தேவியின் காரை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்ய முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்காக ராப்ரி அனுமதி பெறவில்லை எனவும் அதிகாரிகள்  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மாவட்ட அதிகாரிகள் சோதனை செய்ய துவங்கியதும் ஆத்திரமடைந்த  ராஷ்டிரீய ஜனதாதள கட்சி தொண்டர்கள், அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதை பதிவு செய்ய வைத்திருந்த வீடியோ கேமராவை உடைத்து தகராறில் ஈடுப்பட்டனர்.
 
இதுகுறித்து தெரிவித்த லாலு பிரசாத் யாதவ், ஒரு பெண் வேட்பாளரை, பெண் காவல் துறையினரைக்கொண்டே சோதனையிட வேண்டும். அந்த குழுவில் பெண் போலீசார் இல்லை .இது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயலாகும். நானும் , ராப்ரியும் எப்போதும் அனுமதி இல்லாமல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டதில்லை என  கூறினார்.  
 

Share this Story:

Follow Webdunia tamil