Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வக்பு வாரிய மசோதாவுக்கு ஆதரவு.. சொந்த கட்சியினரே நிதிஷ்குமாருக்கு எதிர்ப்பு..!

Siva
வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (07:46 IST)
வக்பு வாரிய திருத்த மசோதாவை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் பின்னணியில், அவருடைய சொந்த கட்சியிலிருந்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் தற்போது பாஜக கூட்டணியில் இருக்கின்ற நிலையில், வக்பு வாரியம் மசோதாக்கு அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக ஆதரவு தெரிவித்தார். இதனால், கட்சியின் நிலைப்பாடு குறித்து கட்சியின் முஸ்லிம் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
 
இந்த விவகாரத்தில் ஆலோசனை செய்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று நிதிஷ் கட்சியில் உள்ள முஸ்லீம் தலைவர்கள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கட்சியில் இருந்து சில முஸ்லிம்  தலைவர்கள் வெளியேற திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இக்கட்சியின் மூத்த தலைவர் முகமது ஆசீர் அன்சார் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
 
அது மட்டும் இல்லாமல், முன்னாள் சிறுபான்மை பிரிவு தலைவர் மற்றும் பீகார் சட்டமன்ற குழு துணைத் தலைவர் நிதிஷ்குமாரை சந்தித்து தனது அதிருப்தியை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. பீகாரில் சுமார் 18% முஸ்லிம் வாக்காளர்கள் உள்ள நிலையில், அடுத்த தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 ஆண்டுகளுக்கு பிறகு லாபத்தில் பிஎஸ்என்எல்.. ஒரே காலாண்டில் எத்தனை கோடி லாபம்?

மாநிலங்களவையில் நிறைவேறியது வக்ஃப் சட்டத் திருத்த மசோதா.. அதிமுக எதிர்த்து வாக்களிப்பு..!

வக்பு வாரிய மசோதாவுக்கு விஜய் கண்டனம்.. காரசாரமான அறிக்கை..

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

அடுத்த கட்டுரையில்
Show comments