Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகார் வேளாண்மை கல்லூரிக்கு அப்துல் கலாம் பெயர்: நிதிஷ் குமார் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2015 (20:07 IST)
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பீகாரில் உள்ள வேளாண்மை கல்லூரிக்கு அவரது பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று அறிவித்துள்ளார்.
 

 
அப்துல் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பாட்னாவில் இருந்து இன்று டெல்லி புறப்பட்ட பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பீகாரின் வளர்ச்சி பற்றி, குறிப்பாக கிராமப்புற வளர்ச்சி பற்றி அப்துல் கலாம் எப்போதுமே நினைத்து வந்தார். பீகார் எப்போதுமே அவரது இதயத்துக்கு மிக நெருக்கமாக இருந்துள்ளது.
 
அவரது நினைவாக இங்குள்ள கிஷன்கஞ்ச் வேளாண்மை கல்லூரியின் பெயரை ஏபிஜே அப்துல் கலாம் வேளாண்மை கல்லூரி என்று மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
 
அப்துல் கலாமின் மறைவையொட்டி பீகார் மாநில அரசுக்கு சொந்தமான பள்ளிக்கூடங்க்ளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

Show comments