தகுதியுள்ள பயனாளிகளுக்கு மட்டும் சலுகைகள்.. உண்மையை சொல்லி ஓட்டு கேட்கும் தெலுங்கானா முதல்வர்..!.

Webdunia
திங்கள், 16 அக்டோபர் 2023 (10:50 IST)
தெலுங்கானா மாநில தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கும் நிலையில் தகுதியுள்ள பயனாளர்களுக்கு மட்டும் சலுகைகள் வழங்கப்படும் என உண்மையைச் சொல்லி அம்மாநிலத்தின் ஆளுங்கட்சியான  பாரத ராஷ்டிர சமிதா கட்சி வாக்குறுதி வழங்கி உள்ளது.  
 
தெலுங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் சந்திரசேகர் ராவ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் 
 
அதில் தகுதி உள்ள பயனாளிகளுக்கு ரூபாய் 400 விலையில் கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என்றும்  தகுதியுள்ள பயனாளர்களுக்கு ரூபாய் 15 லட்சம் சுகாதார காப்பீடு அளிக்கப்படும் என்றும்  தகுதி உள்ள பயனாளர்களுக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது  
 
மேலும் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் ஆட்சிக்கு வந்த ஆறு முதல் ஏழு மாதங்களில் நிறைவேற்றுவோம் என்றும் கடந்த தேர்தல் அறிக்கைகள் குறிப்பிடப்பட்ட 90% சமூக நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி மகளிர்களுக்கு மாதம் ரூபாய் 2500 உள்பட பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தி திரைப்படங்கள், பாடல்களுக்கு தடை: மசோதா கொண்டு வர தி.மு.க. அரசு பரிசீலனையா?

மீண்டும் ஒரு பல்க் வேலைநீக்க நடவடிக்கை எடுக்கும் அமேசான்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

தீபாவளியை முன்னிட்டு தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்! வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாது!? - முழு விவரம்!

மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்.. உடன் வந்த நண்பர் தான் காரணமா?

அமெரிக்காவுக்கான சர்வதேச தபால் சேவை மீண்டும் தொடங்கியது: 2 மாதத்திற்கு பின் என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments