Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"நான் சாப்பிடுவதை முடிவு செய்ய நீ யார்?": கமல்ஹாசன்

, வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (11:36 IST)
பார்ப்பனர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என இந்து மதத்தின் புனித நூல்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது என நடிகர் கமல்ஹாசன் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 

 
தன் கருத்துகளைச் சொல்வதில் இம்மியளவு கூட தயக்கம் காட்டாதவர் கமல்ஹாசன். சமீபத்தில் என்டிடிவிக்கு அளித்த பேட்டியின்போது, மகாராஷ்ட்டிராவில் மாட்டுக்கறி தடை செய்யப்பட்டிருப்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், ஒருவர் என்ன சாப்பிடவேண்டும் - சாப்பிடக்கூடாது என்று முடிவு செய்யும் உரிமை அவருக்கானது. அதை அரசாங்கம் முடிவு செய்ய முடியாது. கட்டுப்படுத்தும் உரிமையும் கிடையாது.
 
மாடுகளைக் கொல்லுவதைத் தடுக்க வேண்டும் என்றால், மீன்கள் உள்பட மற்ற மிருகங்களைக் கொல்லுவதையும் கண்டிப்பாகத் தடுக்கவேண்டுமே. சில இடங்களில் பிராமணர்கள் மீன் சாப்பிடுகிறார்கள். அந்த மீனைக் கொல்லுவதையும் தடுக்க வேண்டும்.
 
வேத காலத்தில் பிராமணர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டதாக புனித நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. நான் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை என்பது வேறு விஷயம். ஆனால், அதைச் சாப்பிடலாமா? வேண்டாமா? என்பதை அரசாங்கம் முடிவு செய்யக் கூடாது என்றார் அழுத்தம் திருத்தமாக..!

Share this Story:

Follow Webdunia tamil