Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்க திட்டம்..! – முதலமைச்சரை கலங்க வைத்த திரைப்படம்!

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (13:54 IST)
சமீபத்தில் வெளியான 777 சார்லி பார்த்த கர்நாடக முதல்வர் தெருநாய்களை தத்தெடுத்து வளர்க்கும் சிறப்பு திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக கூறியுள்ளார்.

கன்னடத்தில் கிரண்ராஜ் இயக்கத்தில் ரக்‌ஷித் ஷெட்டி நடித்து உருவான படம் “777 சார்லி”. ஒரு நாயை மையமாக கொண்ட இந்த படம் கடந்த ஜூன் 10ம் தேதி வெளியான நிலையில் விமர்சன அளவிலும், வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தை சமீபத்தில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பார்த்துள்ளார். இந்த படத்தை பார்த்ததும் கடந்த ஆண்டு தான் ஆசையாக வளர்த்த நாய் இறந்து போனதை நினைத்து கதறி அழுதுள்ளார் பசவராஜ் பொம்மை.

அத்தோடு நில்லாமல் தற்போது கர்நாடகாவில் தெருநாய்களை தத்தெடுத்து வளர்ப்பதற்கான சிறப்பு திட்டத்தையும் அமல்படுத்தப்போவதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் இந்த அறிவிப்புக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் பலரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments