Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலியுடன் புத்தாண்டை கொண்டாட தடையாக இருந்த வாலிபர் கொலை

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2016 (18:02 IST)
டெல்லியில் பார் மேலாளராக இருக்கும் 30 வயதான மந்தீப் என்பவர் புத்தாண்டு அன்று தனது ரூமில் உடன் வசிக்கும் ரவீந்தர் என்பவை கொலை செய்ததாக நேற்று கைது செய்யப்பட்டார்.
 
மந்தீப்பின் ரூமிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் முகம் அடையாளம் தெரியாத நிலையில் ரவீந்தரின் உடல் ஜனவரி 1 ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டது.
 
ரவீந்தரின் சகோதரன் ரவீந்தர் காணாமல் போனதாக கொடுத்த புகாரை அடுத்து, கண்டெடுக்கப்பட்ட அந்த உடல் ரவீந்தர் தான் என அடையாளம் காணப்பட்டது.
 
கைது செய்யப்பட்ட பார் மேலாளர் மந்தீப் கடந்த 2 வருடங்களாக ரவீந்தரின் உறவினர் சுரேந்தருடன் ஒரே ரூமில் வசித்து வந்தார். அவர் இந்திரா காந்தி விமானநிலையத்தில் சக்லேட் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
 
இவர்களுடன் ரவீந்தர் கடந்த 6 மாதங்களாக உணவு மற்றும் இருப்பிட வாடகை தொடர்பாக எந்த பணமும் கொடுக்காமல் வசித்து வந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த வழக்கில் மந்தீப் நேற்று கைது செய்யப்பட்டார்.
 
காவல் துறையினரின் விசாரணையில் ரவீந்தர் கொலை செய்யப்படுவதற்கு முன் ரவீந்தருக்கும், மந்தீப்பிற்கும் வாக்குவாதம் நடந்தது தெரியவந்துள்ளது.
 
மந்தீப் தனது காதலியுடன் தனது ரூமில் புத்தாண்டை கொண்டாட திட்டமிட்டிருந்தார். ஆனால் மந்தீப்பின் திட்டத்தை குலைக்கும் விதமாக ரவீந்தர் தனது நண்பர்களுடன் மதுபானங்களுடன் ரூமுக்கு வந்துள்ளான்.
 
இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. இந்த வாக்குவாதத்தின் போது ரவீந்தரின் நண்பர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றனர். வாக்குவாதத்தின் போதுஇருவரும் அடித்துக்கொண்டனர்.
 
இந்த சண்டை அவர்களின் அறையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள லேன் 9 இல் தொடர்ந்தது. இங்கு தான் ரவீந்தர் மந்தீப்பால் கொலை செய்யப்பட்டு, அடையாளம் தெரியக்கூடாது என்பதற்கா முகம் சேதப்படுத்தப்பட்டது என காவல் துறையினர் தெரிவித்தனர்.

கோவிஷீல்டை அடுத்து கோவேக்ஸின் தடுப்பூசியிலும் பக்க விளைவுகள்? அதிர்ச்சி தகவல்..!

பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம் : அமைச்சர் அமித்ஷா

இரவை குளிரவைக்க போகும் மழை! 14 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

Show comments