Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச்.31 வரை வங்கிகள் இயங்கும் நேரம் மாற்றம்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 23 மார்ச் 2020 (12:06 IST)
கொரோனா வைரஸுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மார்ச் 31 வரை பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள் திரையரங்குகள் மால்கள் உள்பட பல முக்கியமானவை அடைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த அதிரடியாக மார்ச் 31 வரை தினமும் 4 மணி நேரத்துக்கு மட்டுமே வங்கிகள் இயங்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்று முதல் மார்ச் 31 வரை இந்தியா முழுவதும் வங்கிகள் அனைத்துமே 4 மணி நேரத்தில் மட்டுமே செயல்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை இந்திய வங்கிகள் சங்கம் உறுதி செய்துள்ளது,
 
இதன்படி காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே வங்கிகள் செயல்படும் என்றும் சில வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப காலை 11 மணி முதல் 3 மணி வரை செயல்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
 
மேலும் வங்கியில் இருந்து பணம் எடுத்தல், பணம் கட்டுதல், காசோலை பரிமாற்றம், அரசு தொடர்பான பணிகள், மற்ற வங்கிகளுக்கு பணம் கொடுத்தல் ஆகிய பணிகள் மட்டுமே நடக்கும் என்றும் நகைக்கடைகள், வீட்டு கடன் ஆகியவை எந்த பணிகளும் வரும் மார்ச் 31ம் தேதி வரை இல்லை என்றும் வங்கிகள் அறிவித்துள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments