Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேஷன் கடைகளில் இனி வங்கிச் சேவை.. இது புதிது!!!

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2016 (14:07 IST)
நாடு முழுவதும் உள்ள 5.5 லட்சம் பொது விநியோகக் கடைகளில் வங்கிச் சேவை அளிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

 
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் வங்கிச் சேவைகளை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இதன் மூலம் ரேஷன் கடைகளில் வங்கி கணக்கை செயல்படுத்திக் கொள்ள முடியும். 
 
இந்த திட்டத்தில் வங்கி முகவர்களாக ரேஷன் கடைகள் செயல்படும். முதல் கட்டமாக 55 ஆயிரம் கடைகளில் விரைவில் இத்திட்டம் கொண்டு வரப்பட இருக்கிறது.
 
அனைத்து ரேஷன் கடைகளும் மாநில அரசின் கீழ் இயங்கி வருகின்றன. உணவு பாதுகாப்பு அமைப்பின்படி மானிய விலையில்  உணவுப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
 
இந்தியாவில் அஞ்சலகங்களை விட ரேஷன் கடைகள் அதிகம் உள்ளன. அதனால் இந்த திட்டத்தை எளிதாக செயல்படுத்த முடியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
அடுத்த மூன்று மாதங்களில் 55 ஆயிரம் ரேஷன் கடைகளில் இந்தத் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments