Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி வேலை நேரத்தில் மீண்டும் மாற்றம்: வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவிப்பு

Webdunia
புதன், 15 ஏப்ரல் 2020 (15:29 IST)
வங்கி வேலை நேரத்தில் மீண்டும் மாற்றம்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வங்கியின் வேலை நேரம் சமீபத்தில் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை மாற்றப்பட்டது. ஆனால் சில நாட்களில் வங்கிகள் முழுமையான நேரங்களில் செயல்படும் என்றும் சமூக விலகலை கடைபிடித்து மாஸ்க் அணிந்து வாடிக்கையாளர்கள் வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது
 
இந்த நிலையில் வங்கிகள் மாலை 4 மணி வர திறந்திருந்தாலும் வாடிக்கையாளர்களின் வருகை குறைவாகவே இருப்பதன் காரணமாக மே 3ஆம் தேதி வரை வங்கிகள் இனி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும் என, தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதற்கட்ட ஊரடங்கின்போது வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வங்கிகளுக்கு வந்ததால் மாலை 4 மணி வரை வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டன. ஆனால் தற்போது இரண்டாம் கட்ட ஊரடங்கில் விதிகள் கடுமையாக பின்பற்றப்படுவதால் வாடிக்கையாளர்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. எனவே வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் பகல் 1 மணிக்கு முன்னதாகவே தங்களது வங்கிப் பணிகளை முடித்துக் கொள்கின்றனர். எனவே இனி பிற்பகல் 2 மணி வரை மட்டுமே வங்கிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments