வங்கிகள் செயல்படும் நேரம் மீண்டும் மாற்றம்

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2020 (10:23 IST)
கொரோனா வைரஸ் காரணமாக ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாகவும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவும் வங்கிகளின் நேரம் 10 மணி முதல் 2 மணிவரை சமீபத்தில் மாற்றப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் 10 மணி முதல் 4 மணி வரை வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அளவிலான வங்கிகள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
மத்திய அரசு வழங்கும் நிவாரண நிதியை பயனாளிகள் பெற வங்கிகள் வழக்கமான நேரத்தில் செயல்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
 
இதை ஏற்று வங்கிகள் பழையபடி காலை 10 மணி முதல் மாலை4 மணி வரை செயல்படும். மேலும்,வைரஸ் பரவுவதை தடுக்க வங்கியில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதோடு, வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்’ அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று தேர்தல் நடந்தால் திமுகவுக்கு தான் வெற்றி.. இந்தியா டுடே, சி வோட்டர் கணிப்பு..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமண போட்டோஷூட்.. பக்தர்கள் அதிர்ச்சி..!

இனி காங்கிரஸ் வந்தாலும் வேண்டாம்.. தனித்து என் போட்டி என்ற முடிவில் விஜய்?

அண்ணாமலைக்கு திடீரென பாஜக கொடுத்த புதிய பதவி.. இனி ஜெட் வேகம் தான்..!

தேர்தல் பணியில் வேகம் காட்டும் தவெக!. விரைவில் வேட்பாளர் பட்டியல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments